Home வாழ் நலம் அமெரிக்காவிலும் மெர்ஸ் ஆட்கொல்லி நோய் பரவல்?

அமெரிக்காவிலும் மெர்ஸ் ஆட்கொல்லி நோய் பரவல்?

479
0
SHARE
Ad

mars223வாஷிங்டன், மே 5 – சவுதி அரேபியா உள்ளிட்ட அரேபிய நாடுகளில் உயிர்கொல்லியாகப் பரவி வரும் மெர்ஸ் (MERS) நோய், தற்போது அமெரிக்காவிலும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இதுவரை 70–க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு பலியாகி உள்ளனர். இந்நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டு அமெரிக்கா திரும்பிய ஒருவரை இந்நோய் தாக்கியுள்ளது. அவரை இண்டியானாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

#TamilSchoolmychoice

நோய் தாக்குதலுக்குள்ளானவர் யார்? என்ற விவரங்கள் எதுவும் வெளியிட வில்லை. ஆனாலும் அவருடைய உடல்நிலை கட்டுக்குள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.