Home உலகம் நைஜீரியாவில் உலக பொருளாதாரக் கருத்தரங்கம்: பாதுகாப்பு அதிகரிப்பு!

நைஜீரியாவில் உலக பொருளாதாரக் கருத்தரங்கம்: பாதுகாப்பு அதிகரிப்பு!

484
0
SHARE
Ad

naijeriaலாகாஸ், மே 5 – மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகிறது.

மேற்கத்திய கல்வி தடை என்ற பொருள்படும் இவர்களின் பெயருக்கு ஏற்ப இந்த அமைப்பு கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஏராளமான பள்ளிகளைத் தாக்கி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகின்றது. கடந்த மாதம் 15 -ம் தேதி இவர்களால் கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகளில் பாதிக்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று இன்னும் அறியப்படவில்லை.

இந்நிலையில் நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் வரும் 7-9 ஆம் தேதிகளில் உலக பொருளாதார கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக சீனப் பிரதமர் லீ கி கியாங் கலந்து கொள்கின்றார். இவருடன் பிற ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சர்வதேசப் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.

#TamilSchoolmychoice

இதையொட்டி தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும், முக்கியத்துவமில்லாத அரசு அலுவலகங்களையும் மூடுமாறு நைஜீரியாவின் அதிபர் குட்லக் ஜோனாதன் உத்தரவிட்டுள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.