Home இந்தியா மரண எண்ணிக்கை 19ஆக உயர்ந்த மகாராஷ்ட்ரா ரயில் விபத்து – படக் காட்சிகளுடன்…

மரண எண்ணிக்கை 19ஆக உயர்ந்த மகாராஷ்ட்ரா ரயில் விபத்து – படக் காட்சிகளுடன்…

519
0
SHARE
Ad

மும்பாய், மே 4 – மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இரயில் தடம் புரண்டதால் நிகழ்ந்த விபத்தில் மரண எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நுட்பப் பிரச்சனையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ரயில்வே அமைச்சு கூறியுள்ளது. விபத்தில் மரணமடைந்துள்ளவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்பட்ட வேளையில், கடுமையாக காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 10,000 ரூபாயும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.

விபத்தைத் தொடர்ந்து கொங்கன் ரயில்வே பயணப் பாதையில் மற்ற இரயில்களுக்கான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

#TamilSchoolmychoice

அதனால், கோவா-மும்பாய்க்கும் இடையிலான நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்த பயணிகள் முன்வந்ததைத் தொடர்ந்து அந்த நெடுஞ்சாலைகள் வாகன நெரிசலுக்கு உள்ளாகின.

18 killed in India rail accident

train_accident_1-650_050414073208

18 killed in India rail accident

18 killed in India rail accident

18 killed in India rail accident

படங்கள் – EPA