ரோகா, மே 4 – இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ரயில் தடம் புரண்ட சம்பவத்தில் இதுவரை 12 பேர் மரணமடைந்திருக்கின்றனர். மேலும் 30 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர்விரைந்து, காயமடைந்தவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.
ராஜ்காட் மாவட்டத்தில் நகோத்தேன் – ரோகா இடையிலான ரோகா என்ற இடத்தில், திவா-சவந்த்வாடி ரயில் தடம் புரண்டது. இதில், மூன்று பெட்டிகள் கவிழ்ந்தன.
கவிழ்ந்த பெட்டிகளுக்கு அடியில் சிக்கிக் கொண்ட பயணிகளின் உடல்களை மீட்பதற்கு மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, கொங்கன் ரயில்வே பாதையில் இரயில் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Comments