டெல்லி, மே 8 -நாடாளுமன்ற தேர்தலில் 8-வது கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 64 நாடாளுமன்ற தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது.மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 82 சதவீத வாக்குகள் பதிவானது.
நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் 9 கட்டங்களாக நடந்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் 6 தொகுதிகளில் நேற்று நடந்த தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவானது.
ஆந்திராவின் சீமாந்திரா பகுதியில் உள்ள 25 நாடாளுமன்றதொகுதிகளிலும் 175 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நடந்த தேர்தலில் 76.01 சதவீத வாக்குகள் பதிவானது.
உத்தரகாண்ட்டில் 5 தொகுதிகளில் நேற்று நடந்த தேர்தலில் 62 சதவீத வாக்குகள் பதிவானது. இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவானது.
பீகாரில் உள்ள 7 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பதிவானது. உத்தரப் பிரதேசத்தில் 15 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 55.52 சதவீத வாக்குகள் பதிவானது.
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மற்றும் லடாக் ஆகிய இரண்டு தொகுதிகளில் நடந்த தேர்தலில் 43 சதவீத வாக்குகள் பதிவானது.மக்களவை தேர்தலில் இதுவரையில் மொத்தம் 502 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. எஞ்சிய 41 தொகுதிகளில் மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.