பட்டியலில், ஸ்பெயின் அணி 1,460 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி அணி 1,340 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் போர்ச்சுகல் அணி 1245 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. பிரேசில் அணி 1,210 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி தற்போது 4-வது இடத்தை பிடித்துள்ளது.
ஐந்தாவது இடத்தை பெற்றுள்ள கொலம்பிய அணி பெற்றுள்ள புள்ளிகள் 1,186 ஆகும். ஆறாவது இடத்தை உருகுவேயும் 7-வது இடத்தை அர்ஜென்டினா அணியும் பெற்றுள்ளன. நான்கு முறை உலக சாம்பியனான இத்தாலி அணி தொடர்ந்து 9-வது இடத்தில் உள்ளது. கிரீஸ் அணி 10-வது இடத்தை பெற்றுள்ளது.