Home உலகம் கால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு – ஸ்பெயின் தொடர்ந்து முதலிடம்

கால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு – ஸ்பெயின் தொடர்ந்து முதலிடம்

724
0
SHARE
Ad

spainமே 9 – உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கவுள்ளதையொட்டி, சர்வதேச கால்பந்து அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை ஃபிஃபா வெளியிட்டுள்ளது.

பட்டியலில், ஸ்பெயின் அணி 1,460 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி அணி 1,340 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் போர்ச்சுகல் அணி 1245 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. பிரேசில் அணி 1,210 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி தற்போது 4-வது இடத்தை பிடித்துள்ளது.

ஐந்தாவது இடத்தை பெற்றுள்ள கொலம்பிய அணி பெற்றுள்ள புள்ளிகள் 1,186 ஆகும். ஆறாவது இடத்தை உருகுவேயும் 7-வது இடத்தை அர்ஜென்டினா அணியும் பெற்றுள்ளன. நான்கு முறை உலக சாம்பியனான இத்தாலி அணி தொடர்ந்து 9-வது இடத்தில் உள்ளது. கிரீஸ் அணி 10-வது இடத்தை பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

fifaதடுமாற்றத்தை சந்தித்து வரும் இங்கிலாந்து அணி கடந்த உலக கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் முறையே 11, 15 மற்றும் 16-வது இடத்தில் உள்ளன. அடுத்த பட்டியல் வரும் ஜுலை 13-ஆம் தேதி உலக கோப்பை போட்டி முடிந்த பின் வெளியிடப்படும்.