ஜெய் நடித்துள்ள திருமணம் எனும் நிக்காஹ் வருகிற 15-ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு அடுத்து வடகறி படம் வெளியாகிறது. இதுதவிர எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்ஜெய். இதில் ஆண்ட்ரியா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
ஜெய் நடித்த சென்னை 28, சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி ஆகிய படங்கள் வெற்றியாகியுள்ளன. இவையெல்லாம் ஜெய் மற்ற நாயகர்களுடன் நடித்தவை. அவர் தனியாக நடித்த வாமணன், அதே நேரம் அதே இடம், அவள் பெயர் தமிழரசி, கனிமொழி, உள்பட எந்த படமும் வெற்றியடையவில்லை.
தற்போது நடித்து வெளிவர இருக்கும் திருமணம் எனும் நிக்காஹ், மற்றும் வடகறி படங்களில் அவர் தனியாக நடித்துள்ளார். அர்ஜுனன் காதலி, தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படங்கள் முடிந்தும் வெளிவராமல் இருக்கிறது. இந்த நிலையில் ஜெய் தயாரிப்பாளர் அவதாரம் எடுப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.