Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: புகழ் – கருத்துள்ள படம்; திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்!

திரைவிமர்சனம்: புகழ் – கருத்துள்ள படம்; திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்!

1090
0
SHARE
Ad

Pugazhகோலாலம்பூர் – ஊருக்கு நடுவில் ஒரு விளையாட்டு மைதானம். அதில் விளையாடிப் பயிற்சி எடுத்து போலீஸ் முதல் ரயில்வே வரையிலான வேலை வாய்ப்புகளில் தேர்வு பெறுகிறார்கள் அந்த ஊர் இளைஞர்கள்.

சும்மா இருப்பார்களா அரசியல்வாதிகள்? அந்த இடத்தை வளைத்துப் போட நினைக்கிறது ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு கூட்டம். அதைத் தடுக்க நினைக்கிறது கதாநாயகன் ஜெய் தலைமையிலான இளைஞர் பட்டாளம். நடக்கும் விளைவுகளே புகழ் படத்தின் கதை.

இயக்குநர் வெற்றிமாறனிடம் பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணிமாறன் தான் இந்தப் படத்தின் இயக்குநர். இதற்கு முன்பு சித்தார்த் நடிப்பில் உதயன் என்எச்4 என்ற படத்தை இயக்கியதும் இவர் தான்.

#TamilSchoolmychoice

நடிப்பு

Jai-Surabhi-Pugazh-movie-latest-stills-4‘புகழ்’ கதாப்பாத்திரத்தில் சமூக அக்கறை கொண்ட இளைஞராக ஜெய் நடித்திருக்கிறார். அவரது கதாப்பாத்திரத்தை மிக எளிமையாக, ஆர்ப்பாட்டமில்லாமல் அதேவேளையில், தேவையான நேரத்தில் துணிந்து செயல்படும் படியாக அமைத்திருக்கிறார் இயக்குநர். அதனால் ஜெய்யின் நடிப்பு கண்களை உறுத்தாமல் மிக எதார்த்தமாக அமைந்துள்ளது.

புகழ் கதாப்பாத்திரத்தை கொஞ்சம் மிகைப்படுத்தி காட்டியிருந்தால் கூட நடிகர் ஜெய்க்கு அது சரியாகப் பொருந்தியிருக்காது.

கதாநாயகி சுரபி.. மெல்லிய ஒடிசலான தேகம்.. குழந்தை போன்ற சாந்தமான முகம், பக்கத்துவீட்டுப் பெண் போன்ற தோற்றம், எதார்த்தமான நடிப்பு… இவை தான் இந்தப் படத்தில் அவர் இடம் பெறக் காரணம் என்று கூறலாம்.

Jai-Surabhi-Pugazh-Tamil-Movie-Stills-6இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வருண் மணியம் என்பதால் முதலில் திரிஷா தான் முன்மொழியப்பட்டார். அதன்பிறகு பிரியா ஆனந்த் நடிக்கிறார் என்றார்கள்.

ஆனால் இயக்குநர் மணிமாறன் விடாப்பிடியாக அந்தக் கதாப்பாத்திரத்திற்கு உச்சத்தில் இருக்கும் நடிகைகள் வேண்டாம் என்று கூறிவிட்டாராம். அவரது பிடிவாதம் வீண் போகவில்லை. சுரபி சரியான தேர்வாகத் தெரிகின்றார்.

இவர்களைத் தவிர இந்தப் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள மூன்று பேர் நம்மை மிகவும் கவர்கிறார்கள். 1. போராட்டவாதியாக நடித்துள்ள பாடலாசிரியர் பிறைசூடன் 2. ஜெய்க்கு அண்ணனாக வரும் கருணாஸ் 3. சேர்மேனாக வரும் நடிகர்.

Jai-in-Pugazh-movie-stills-3“டேய் ஏண்டா உனக்கு இந்த வேண்டாத வேலை.. அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா?” என்று ஒரு அண்ணனாக ஜெய்க்கு கருணாஸ் அறிவுரை கூறும் இடங்களிலெல்லாம் அவரின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு நம்மை நெகிழச் செய்கின்றது.

திரைக்கதை

படத்தின் தொடக்கத்தில் ஒரு சம்பவம்.. அதற்கான பின்னணி குறித்த பிளாஷ்பேக் கதை சொல்லும் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் கூட, பிளாஷ்பேக் முடிவுக்கு வரும் முன்னரே சம்பவத்திற்குக் காரணம் யார் என்பது தெரிந்துவிடுகின்றது.

இதனால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு படத்தின் திரும்புமுனை எந்த ஒரு சுவாரஸ்யத்தை தராது இயல்பாகவே நகர்கிறது.

இதே போன்ற கதையம்சம் கொண்ட ‘மெட்ராஸ்’ திரைப்படத்தை எடுத்துக் கொண்டால், அதில் வரும் பழிவாங்கல், அரசியல், கொலைகள் ஒவ்வொன்றும் நம்மை இருக்கையின் விளிம்பிற்குக் கொண்டு வந்துவிடும். நம்மையும் மறந்து கதை நடக்கும் அந்தச் சூழலுக்குள் சென்று மிரள்வோம்.

Pugazh-Movie-and-Working-Stills-15ஆனால் இந்தப் படத்தில், அரசியல் தந்திரங்கள், பழிவாங்கல், கொலை செய்ய எதிரிகள் போடும் மாஸ்டர் பிளான் என எல்லாம் இருந்தும், எந்த ஒரு காட்சியும் நம்மை இருக்கையின் நுனிக்கு கொண்டு வரத் தவறிவிட்டது.

எனினும், எதார்த்தமான கதாப்பாத்திரப் படைப்பு, நடிகர்களின் இயல்பான நடிப்பு, ஒரு ஊருக்குள் இருக்கும் வறண்டு போன மைதானம் இளைஞர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பசுமையை ஏற்படுத்துகின்றது போன்ற சமூகம் சார்ந்த கருத்துகள், அந்த மைதானத்தின் வரலாறு சொல்லும் வசனங்கள் போன்றவை தான் படத்தை தாங்கி நிற்கின்றது.

ஒளிப்பதிவு, இசை

வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் எதார்த்தம். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வீடுகள், பாடல் காட்சியில் பாண்டிச்சேரியின் அழகு, ஆலய வளாகங்கள் ஆகியவை எளிமையான கதைக்கு ஏற்ப அழகான காட்சிப் பதிவுகள்.

படத்தில் பெரும்பாலான காட்சிகள் அந்த விளையாட்டு மைதானத்தைச் சுற்றி தான் நகர்கின்றது. அந்த விளையாட்டு மைதானத்திற்கு ஏன் அரசியல்வாதிகள் அவ்வளவு போட்டி போடுகின்றனர் என்று அதன் மதிப்பு சொல்வது போல் பிரம்மாண்டமாக அதைக் காட்சிப்படுத்தியிருந்தால் ரசிகர்களை கதையுடன் இன்னும் ஒன்றச் செய்திருக்கும்.

Pugazh-(11)மாறாக, விளையாட்டு மைதானத்தில் ஒரு ஓரமாக ஜெய் மற்றும் நண்பர்கள் அமர்ந்திருப்பது போலவே பெரும்பான்மையாகக் காட்சிப் படுத்தியிருப்பது பெரும் குறையாகவே தெரிகின்றது.

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் சுமார் இரகம் தான். பின்னணி இசை இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் புகழ் – சமூகப் பிரச்சனையை முன்னிறுத்தும் கருத்துள்ள படம்! ஆனால் திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்ம் கூட்டியிருக்கலாம்!

– ஃபீனிக்ஸ்தாசன்