Home Featured தமிழ் நாடு பொள்ளாச்சி பண்ணை வீட்டில் ஓ.பன்னீர் செல்வம் சிறைவைப்பா? – ஜெயலலிதா அதிரடி!

பொள்ளாச்சி பண்ணை வீட்டில் ஓ.பன்னீர் செல்வம் சிறைவைப்பா? – ஜெயலலிதா அதிரடி!

1054
0
SHARE
Ad

OPSVC2சென்னை – சட்டமன்ற சீட் பேரத்தின் பின்னணியில் சமீப நாட்களாக நடக்கும் அதிரடி வேட்டைகள் ஓ.பன்னீர் செல்வம் கூடாரத்தை கலங்கடித்துவிட்டது. தற்போது பொள்ளாச்சியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் ஓ.பி.எஸ் சிறை வைக்கப்பட்டிருக்கிறாராம்.

சமீபநாட்களாக, நிதியமைச்சர் ஓ.பி.எஸ்ஸின் நெருங்கிய வட்டாரங்களை தேடித் தேடி வேட்டையாடி வருகிறது மத்திய குற்றப் பிரிவு காவல்துறை. இதுவரையில், ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓ.பி.எஸ்ஸுன் நெருங்கிய நண்பர் சீனி கந்தசாமியை ஏற்கெனவே மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் கொடுத்த தகவலின் பேரில் விருதுநகர் சுந்தரபாண்டியனைக் கைது செய்திருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

முன்னதாக, போயஸ் கார்டனின் ஊழியர் ரமேஷ், சிவகுமார், சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஓ.பி.எஸ்ஸின் பரிவர்த்தனைகள் அனைத்தும் ஜெயலலிதாவின் கவனத்துக்கு உடனுக்குடன் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சியில் சசிகலாவின் உறவினரான மருத்துவர் ஒருவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். கார்டனுக்கு நெருக்கமான மன்னார்குடி உறவினர்களும், சில காவல்துறை அதிகாரிகளும் ஓ.பி.எஸ்ஸிடம் தீவிர விசாரணையைத் தொடங்கிவிட்டனர். முடிவில், ஓ.பி.எஸ் வாங்கிக் குவித்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். உச்சகட்டமாக, ஓ.பி.எஸ் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் அதிரடிக்கிறது.