Home கலை உலகம் நடிகர் ஜெய்யால் தற்கொலை வரை சென்ற ‘பலூன்’ இயக்குநர்!

நடிகர் ஜெய்யால் தற்கொலை வரை சென்ற ‘பலூன்’ இயக்குநர்!

991
0
SHARE
Ad

Baloonசென்னை – 70எம்எம் தயாரிப்பில், சினிஸ் இயக்கத்தில் நடிகர் ஜெய், அஞ்சலி நடிப்பில் கடந்த வாரம் வெளியானது ‘பலூன்’ திரைப்படம்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் சுமாரான கதை, விறுவிறுப்பில்லாத திரைக்கதை காரணமாக எதிர்பார்த்த வரவேற்பினைப் பெறவில்லை.

இந்நிலையில், தயாரிப்பாளர் தரப்பு தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு நடிகர் ஜெய் தான் காரணம் என புகார் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடித்த ஜெய், அப்படியே வந்தாலும் மது அருந்திவிட்டு வந்தார் என்றும் தயாரிப்பாளர் தரப்பு தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறது.

இதனால் பல முறை விரக்தியின் உச்சிக்கே சென்ற இயக்குநர் சினிஸ் தற்கொலைக்கு முயன்றார் என்றும் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்திருக்கிறது.

எப்போது படப்பிடிப்பு முடியும் என்று கேட்டுக் கொண்டே இருக்கும் ஜெய், படப்பிடிப்பு முடிந்தவுடன் மது அருந்தச் சென்று விடுவார் என்றும் அப்புகார் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

தங்களுக்கு ஏற்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டத்தை ஜெய் தான் திரும்பத் தர வேண்டும் என்றும், தயாரிப்பாளர் சங்கம் அதற்குத் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அப்புகாரில் கூறப்பட்டிருக்கிறது.