Home நாடு பீட்டர் அந்தோணி மீண்டும் கைது!

பீட்டர் அந்தோணி மீண்டும் கைது!

921
0
SHARE
Ad

PETER ANTHONYகோத்தா கினபாலு – 155 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நிலம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஊழல் வழக்கு ஒன்றிற்காக, பார்ட்டி வாரிசான் சபா கட்சியின் உதவித் தலைவர் டத்தோ பீட்டர் அந்தோணி இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இன்று காலை 10.25 மணியளவில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அலுவலகத்திற்கு பீட்டர் அந்தோணி வந்ததாகவும், அங்கு அவர் கைது செய்யப்பட்டதாகவும் எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

நாளை சனிக்கிழமை அந்தோணி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தடுப்புக்காவல் விசாரணைக்கான அனுமதி பெறப்படும் என டத்தோஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

 

Comments