Home நாடு பீட்டர் அந்தோணியை விசாரணைக்கு அழைத்தது புத்ராஜெயா!

பீட்டர் அந்தோணியை விசாரணைக்கு அழைத்தது புத்ராஜெயா!

1076
0
SHARE
Ad

PETER ANTHONYகோத்தா கினபாலு – புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு நாளை புதன்கிழமை காலை 8.30 மணியளவில் வர வேண்டுமென பார்ட்டி வாரிசான் சபா கட்சியின் உதவித் தலைவர் டத்தோ பீட்டர் அந்தோணிக்கு மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் அழைப்பு விடுத்திருக்கிறது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் சபாவிலுள்ள எம்ஏசிசி அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

கிராமப்புற மேம்பாட்டு நிதியில் மில்லியன் கணக்கில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து அதன் விசாரணை நடைபெற்று வருகின்றது.

#TamilSchoolmychoice

இவ்வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 5 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பீட்டர் அந்தோணி, கடந்த அக்டோபர் 13-ம் தேதி, 50,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.