Home நாடு அந்தோணிக்கு பிணையா? மருத்துவமனையில் குவிந்த ஆதரவாளர்கள்!

அந்தோணிக்கு பிணையா? மருத்துவமனையில் குவிந்த ஆதரவாளர்கள்!

1076
0
SHARE
Ad

PETER ANTHONYகோத்தா கினபாலு – கிராமப்புற வளர்ச்சி நிதியில் மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டிருக்கும் பார்ட்டி வாரிசான் சபா கட்சியின் உதவித் தலைவர் டத்தோ பீட்டர் அந்தோணி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இந்நிலையில், அவருக்கு 3 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன.

இதனிடையே, அந்தோணிக்குப் பிணை வழங்கப்பட்டுவிட்டதாக வெளிவந்த தகவலையடுத்து நேற்று வியாழக்கிழமை அவர் சிகிச்சைப் பெற்று வரும் டாமாய் கேபிஜே மருத்துவமனையில் அந்தோணியைக் காண அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர்.

#TamilSchoolmychoice

இதனால் அங்கு சற்று குழப்ப நிலை ஏற்பட்டது.