Home இந்தியா தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்: கமல் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்: கமல் அறிவிப்பு!

810
0
SHARE
Ad

Kamal-Hasanசென்னை – தனது பிறந்தநாளான இன்று நவம்பர் 7-ம் தேதி, நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்கள் முன்னிலையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவற்றில் அரசியலுக்கு வருவது, கட்சி தொடங்குவது உள்ளிட்டவைகளும் இருந்தன.

தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் பழுதடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட கமல்ஹாசன், அதனை சரி செய்ய மக்கள் ஒன்று திரள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், தான் அரசியலுக்கு வந்தால், தன்னை நோக்கியும் கேள்விகள் எழுப்பப்படலாம் என்பதால், நிறைய முன்னேற்பாடுகளோடு தான் செயல்பட்டு, அஸ்திவாரத்தை வலுப்படுத்தி வருவதாகவும் கமல் குறிப்பிட்டார்.