Home இந்தியா கேரளா இரயில் பாலத்தின் அடியில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

கேரளா இரயில் பாலத்தின் அடியில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

1374
0
SHARE
Ad

kerala-mapமாலப்புரம் (கேரளா) – இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் உள்ள மல்லாப்புரம் என்ற இடத்தில் உள்ள ஓர் இரயில் பாலத்தின் அடியில் பெரிய அளவிலான வெடிகுண்டுகளை கேரளா காவல் துறையினர் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் கண்டெடுத்துள்ளனர்.

இந்த வெடிகுண்டுகளைக் கொண்டு இரயில் பாலத்தைத் தகர்க்க சதி நடந்திருக்கலாம் என கணிக்கப்படுகின்றது. இந்த வெடிகுண்டுகள் இராணுவத் தரத்தைக் கொண்டவை என்றும் முதல் கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் நடக்கவிருந்த ஒரு மிகப் பெரிய பயங்கரவாதச் செயல் முறியடிக்கப்பட்டிருப்பதாக கேரளா காவல் துறையினர் கருதுகின்றனர்.