Home நாடு இசா சாமாட்டிடம் காவல் துறையினர் 5 மணி நேர விசாரணை

இசா சாமாட்டிடம் காவல் துறையினர் 5 மணி நேர விசாரணை

934
0
SHARE
Ad

isa_samad-feldaகோலாலம்பூர் – பெல்டா தலைவரான டான்ஸ்ரீ இசா சாமாட் இன்று காலை 10.30 மணியளவில் வருகை தந்து வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இலாகாவில் சுமார் 5 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

இந்தத் தகவலை வணிகக் குற்றங்களுக்கான புலனாய்வு இலாகாவின் தலைவர் டத்தோ அமார் சிங் உறுதிப்படுத்தினார்.

கோலாலம்பூர் ஜாலான் செமாராக்கிலுள்ள பெல்டாவின் நிலம் மாற்றப்பட்டது தொடர்பில் எழுந்த புகார்களின் தொடர்பில் காவல் துறை தனது விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதே புகார்களின் அடிப்படையில்தான் டான்ஸ்ரீ இசாவும் விசாரிக்கப்படுகிறார். தனது உதவியாளர்கள் சிலருடன் இசா சாமாட் விசாரணைக்கு வந்தார்.

இதுவரையில் காவல் துறையினர் 8 சாட்சியாளர்களிடம் வாக்குமூலத்தைப் பெற்றிருக்கிறது. இந்த வரிசையில் இசா சாமாட் 9-வது நபராவார்.

பெல்டா நில மாற்றம் தொடர்பான புகார்கள் குற்றவியல் பிரிவின் 420-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகின்றன.

இந்தப் பிரிவின் கீழ் ஏமாற்றுவது, மற்றும் ஒரு சொத்துடமையை நேர்மையற்ற முறையில் மாற்றுவது ஆகியவை குற்றமாக்கப்படுகின்றன.