Home One Line P1 பீட்டர் அந்தோணி நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டை மறுத்தார்

பீட்டர் அந்தோணி நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டை மறுத்தார்

439
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: ரிஸ்டா நில ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சபா உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர் பீட்டர் அந்தோணி, இன்று இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

8.75 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான ஐந்து பண மோசடிகளை எதிர்கொள்ளும் மேலாலாப் சட்டமன்ற உறுப்பினர், சபா தொங்கோடில் ஒரு நிலத்தை வாங்குவதை கவனிக்க ரிஸ்டாவால் பணியமர்த்தப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் பெர்சியஸ் உபுவுக்கு உடந்தையாக இருந்ததை மறுத்து விசாரணைக் கோரியுள்ளார்.

கம்போங் சுங்கை பினாங்கா மற்றும் கம்போங் சுங்கை லாபன் ஆகிய இடங்களில் 6,768 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த பயன்படுத்த, கூட்டரசு நிறுவனத்திடமிருந்து பெற்ற நிதியிலிருந்து 15,545,400 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

பெனாம்பாங்கின் ஜாலான் புண்டுசானில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பிளாசாவுக்கு அருகிலுள்ள உபுவின் சட்ட அலுவகத்தில் 2014-ஆம் ஆண்டு ஜூலை 22 மற்றும் 2015 நவம்பர் 19- க்கு இடையில் அந்தோணி இந்த குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கிடையில், உபு மீது 3.9 மில்லியனுக்கும் அதிகமான இரண்டு பண மோசடி நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர்களின் வழக்குகள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி விசாரிக்கப்படும்.

100- க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் கடுமையான காவல் துறை பாதுகாப்புக்கு மத்தியில் கூடியிருந்தனர்.

அரசியல்வாதியாக மாறிய தன்னார்வ தொண்டு சேவகரான அந்தோணி, மே 9 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக 2018 ஜனவரியில் ஊழல் குற்றச்சாட்டுக்காக இரண்டு முறை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.