Home One Line P1 சினி இடைத்தேர்தல்: அம்னோ வேட்பாளர் இன்று அறிவிப்பு

சினி இடைத்தேர்தல்: அம்னோ வேட்பாளர் இன்று அறிவிப்பு

553
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சினி இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் தேசிய முன்னணியின் வேட்பாளரை இன்று வியாழக்கிழமை மதியம் 2.30 மணிக்கு கட்சி அறிவிக்கும் என்று தேசிய முன்னணி பொதுச்செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

“சம்பந்தப்பட்ட வேட்பாளர் தேசிய முன்னணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் தேசியக் கூட்டணி பிரதிநிதிப்பார்.

“வேட்பாளர் யார் என்பது இன்று பெக்கான் அலுவலகத்தில் அறிவிக்கப்படும்.

#TamilSchoolmychoice

“மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாமல் இருக்க, இந்த தேர்தலில் வேறு எந்த வேட்பாளரும் போட்டியில் களம் இறங்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.” என்று அவர் தெரிவித்தார்.

பாரம்பரியமாக சினி சட்டமன்றம் தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் கீழ் இருப்பதாக அவர் கூறினார். வருகிற 20-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் முன்கூட்டிய வாக்களிப்பு ஜூன் 30- ஆம் தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக நம்பிக்கைக் கூட்டணி தமது வேட்பாளரை நிறுத்தும் என்று கூறியிருந்த நிலையில், இப்போது கொவிட்19 பாதிப்பு நாட்டில் தொடர்ந்து இருப்பதால் இந்த இடைத்தேர்தலில் தாங்கள் போட்டியிடப் போவதில்லை என்று அண்மையில் தெரிவித்திருந்தது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அபுபக்கர் ஹாருண் கடந்த மே 6- ஆம் தேதி மாரடைப்பால் காலமானதை அடுத்து சினி சட்டமன்றத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.