Home One Line P2 ராகா : மலேசியர்களுடன் இணைந்து தந்தையர் தினத்தைக் கொண்டாடுகிறது

ராகா : மலேசியர்களுடன் இணைந்து தந்தையர் தினத்தைக் கொண்டாடுகிறது

723
0
SHARE
Ad

கோலாலம்பூர் : உலகமெங்கும் கொண்டாடப்படும் தந்தையர் தினத்தின் மகிழ்ச்சியை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ராகா வானொலியும் தனது நேயர்களுடன் இணைந்து கொண்டாடுகிறது.

ஜூன் 15 முதல் 21 வரை 10-ஆண்டு புகைப்படச் சவாலில் பங்கேற்பதோடு சிறப்பு காணொளிகளையும் நேயர்கள் கண்டு மகிழலாம்.

அனைத்து மலேசியர்களும் ஜூன் 15 முதல் 21 வரை சுவாரசியமான 10 ஆண்டு புகைப்படச் சவாலில் (10-year photo challenge) பங்கேற்பதன் மூலம் ராகாவின் தந்தையர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பிக்கலாம்.

#TamilSchoolmychoice

இரசிகர்கள் தங்களுக்கு பிடித்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை மீண்டும் எடுப்பதோடு, அசல் புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும்.  மேலும், ராகாவையும் (@raaga.my) இணைக்க (Tag-டேக்) செய்ய வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் ராகாவின் சமூக ஊடகங்களில் இடம்பெறும். ராகா அறிவிப்பாளர்கள் மற்றும் பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் பதிவிட்டப் படங்களையும் இரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

அதுமட்டுமின்றி, தந்தையருக்கு சமர்ப்பிக்கும் வகையில் ராகா அறிவிப்பாளர்களின் சுவாரசியமான மனதைக் கவரும் காணொளிகளையும் ராகாவின் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கண்டு இரசிக்கலாம். ஜூன் 20, ஒரு தந்தைக்கும் குழந்தைக்கும் இடையிலான தலைமுறை இடைவெளியைப் பற்றின காணொளியையும் ஜூன் 21, தந்தைகள் குழந்தைகளுக்காக செய்த தியாகங்களைப் பற்றிய காணொளியையும் கண்டு மகிழலாம்.

மேலும் விபரங்களுக்கு, ராகாவின் இன்ஸ்டாகிராம் (@raaga.my) பக்கத்தை வலம் வரவும்.

ராகாவைப் பின்தொடர :

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

வானொலி/பண்பலை வழி கேட்டு மகிழ :

இடம்                                           அதிர்வெண்கள்

கிள்ளான் பள்ளத்தாக்கு              99.3FM

அலோர்ஸ்டார்                            102.4FM

பினாங்கு                                     99.3FM

ஈப்போ                                         97.9FM

சிரம்பான்                                    101.5FM

மலாக்கா                                    99.7FM

ஜோகூர் / ஜோகூர்பாரு            103.7FM

தைப்பிங்                                    102.1FM

லங்காவி                                   101.9FM

ஆஸ்ட்ரோ அலைவரிசை          859