Home One Line P1 இட ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இல்லை- அனுவார் மூசா

இட ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இல்லை- அனுவார் மூசா

558
0
SHARE
Ad

கோலாலம்பூர்: திடீர் தேர்தல் குறித்து கட்சி உச்சமன்றக் கூட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பேசப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

“ஆனால், நாங்கள் பொதுவான விவகாரங்களை பேசினோம் குறிப்பிட்டு எதுவும் பேசவில்லை.” என்று அவர் சுருக்கமாக கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு மத்தியில் இடைத்தேர்தல் ஒரு தீர்வாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி டாக்டர் மகாதீர் முகமட் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியை இழந்தது.

இதனை அடுத்து தேசிய கூட்டணி மார்ச் 1-ஆம் தேதி டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையில் ஆட்சியை அமைத்தது. நம்பிக்கைக் கூட்டணி தொடர்ந்து தங்களுக்கு போதுமான பெரும்பான்மை இருப்பதாகக் கூறி வரும் நிலையில், எல்லாம் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப அம்னோ தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு அதன் பிரதமர் வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினரின் மொத்தம் 112 பேரின் ஆதரவைப் பெற வேண்டியுள்ளது.

அக்கூட்டத்தின்போது கட்சியை மேலும் வலுப்படுத்தவும், மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாத்துக்கு ஏற்ப கட்சியின் பாதையை முடிவு செய்வதற்கும் அக்கூட்டத்தில் பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார். கட்சியில் எந்த ஒரு இட ஒதுக்கீடு பற்றியும் பேசவில்லை என்றும் அனுவார் தெளிவுபடுத்தினார்.

“அவை அனைத்தும் ஊகங்கள் மட்டுமே.” என்று அவர் கூறினார்.