Home One Line P1 மொகிதினுக்கு 20 ஜோகூர் பெர்சாத்து தொகுதித் தலைவர்கள் ஆதரவு

மொகிதினுக்கு 20 ஜோகூர் பெர்சாத்து தொகுதித் தலைவர்கள் ஆதரவு

545
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கட்சியின் தலைவராகவும், எட்டாவது மலேசிய பிரதமராகவும் மொகிதின் யாசினுக்கு குறைந்தது 20 ஜோகூர் பெர்சாத்து தொகுதித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

கெம்பாஸில் உள்ள அதன் தலைமையகத்தில் பெர்சாத்து ஜோகூரின் சிறப்புக் கூட்டத்திற்குப் பிறகு நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர்களின் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கூட்டத்தில் ஜோகூர் பிரிவுகளின் 26 தலைவர்களில் 20 பேர் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

சிறப்பு கூட்டத்தில் முன்னாள் பெர்சாத்து தலைவராகவும், ஏழாவது பிரதமராகவும் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

மற்ற நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்ரிஸ் மகாதீர் (ஜெர்லுன்), சைட் சாதிக் (முவார்); டாக்டர் மஸ்லீ மாலிக் (சிம்பாங் ரெங்காம்) மற்றும் அமிருடின் ஹம்சா (குபாங் பாசு) ஆகியோருக்கும் அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கட்சி அரசியலமைப்பின் 10.2.2 மற்றும் 10.2.3 விதிகளின்படி, டாக்டர் மகாதீர் மற்றும் இதர நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்பியம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்றும் அந்தந்த பிரிவுகளில் தங்கள் கட்சியை பலப்படுத்துவார்கள் என்றும் ஜோகூர் நம்புகிறது.

அண்மையில், கட்சியின் அரசியமைப்பிற்கு எதிராக துன் டாக்டர் மகாதீர் உட்பட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்டதால் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக கடிதம் வெளியிடப்பட்டது.