Home Featured கலையுலகம் அஞ்சலியுடனான நட்பு காதலாக மாறலாம்; திருமணத்தில் நம்பிக்கை இல்லை – ஜெய் கருத்து!

அஞ்சலியுடனான நட்பு காதலாக மாறலாம்; திருமணத்தில் நம்பிக்கை இல்லை – ஜெய் கருத்து!

956
0
SHARE
Ad

Engeyum Eppodhum Premiere Show Pics

சென்னை – மணிமாறன் இயக்கத்தில் ஜெய், சுரபி நடிப்பில் மார்ச் 18-ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் புகழ்.

இந்நிலையில், அண்மையில் அப்படம் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ள ஜெய், அரசியலைக் கதைக்களமாகக் கொண்ட அப்படம் தனக்கு நற்பெயரை வாங்கித் தரும் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, அஞ்சலிக்கும் தனக்கும் இடையிலான உறவு குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஜெய், ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் சேர்ந்து நடித்த போது தனக்கும், அஞ்சலிக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அந்த சமயத்தில் தாங்கள் ஒன்றாகச் சேர்ந்து வெளியே செல்வது என நல்ல நண்பர்களாகப் பழகி வந்ததாகவும், அதன் பின்னர் அஞ்சலி தெலுங்குப் படங்களில் பரபரப்பாகி விட்டதால் தொடர்பில் இருந்து விடுபட்டார் என்றும் ஜெய் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தற்போது மீண்டும் தங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளதாகவும், பின்னாளில் காதலாகும் வாய்ப்பு இருப்பதாகவும் ஜெய் கூறியுள்ளார்.

அதேவேளையில், திருமணத்தில் தனக்கு நம்பிக்கை என்று கூறியுள்ள ஜெய், காதலர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டால் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழலாம் என்றும் கூறியதாக தமிழகத்தின் முன்னணி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.