கோலாலம்பூர் – பிரதமரிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட இரு ஆஸ்திரேலிய செய்தியாளர்களும், நேற்று சரவாக் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் சுற்றுப்பயணி என்ற முறையில் மலேசியாவிற்குள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று துணை உள்துறை அமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் மொகமட் நேற்று தெரிவித்துள்ளார்.
“அவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள் என்றால், தவறு செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் மீண்டும் சுற்றுப்பயணியாக வந்தால் பிரச்சனையில்லை. ஆனால் அவர்கள் மீண்டும் வந்து சட்டத்தை மீறுபடியாக ஏதாவது செய்தால் தான் பிரச்சனை” என்று நாடாளுமன்றத்திற்கு வெளியே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாக ‘கோலாலம்பூர் போஸ்ட்’ தெரிவித்துள்ளது.