Home Featured நாடு ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக சவுதி போர் தொடுத்தால் மலேசியா பங்கேற்காது – ஹிஷாமுடின் அறிவிப்பு!

ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக சவுதி போர் தொடுத்தால் மலேசியா பங்கேற்காது – ஹிஷாமுடின் அறிவிப்பு!

833
0
SHARE
Ad

hishamகோலாலம்பூர் – ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக மத்திய கிழக்கில் மிகப் பெரிய அளவிலான போரை நடத்தும் சவுதி அரேபியாவின் நடவடிக்கையில் மலேசியா பங்கேற்காது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ரியாத்தில் இருக்கும் மலேசியப் படைகள் எந்த ஒரு தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்று குறிப்பிட்டுள்ள ஹிஷாமுடின், அவர்கள் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களிடம் தேவையான ஆயுதங்கள் இல்லை என்றும், அமைதி காக்கும் நடவடிக்கைகளில் விமானங்களைப் பயன்படுத்துவதும், பாதுகாப்பதும் தான் அவர்களின் மிகப் பெரிய பணி என்று நாடாளுமன்றத்தில் பிகேஆர் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா எழுப்பிய கேள்விக்கு ஹிஷாமுடின் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ரியாத்தில் இருக்கும் மலேசிய விமானப் படையைச் சேர்ந்த இரு சி-130 ரக விமானங்கள், 31 அதிகாரிகள், 56 மற்ற பணிகளுக்கான வீரர்கள், அண்மையில் ஏமனில் நடந்த இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றதாகக் கூறப்படும் செய்திகளை ஹிஷாமுடின் மறுத்துள்ளார்.

சவுதி அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று முதல் முறையாக மலேசிய இராணுவ வீரர்கள் அங்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

19 நாடுகள் பங்கேற்கும் அந்தப் பயிற்சியில் மலேசிய இராணுவ வீரர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், பகிர்ந்துகொள்ளவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.