Home உலகம் கொலம்பியாவில் பேருந்தில் தீ விபத்து – 30 குழந்தைகள் பலி?

கொலம்பியாவில் பேருந்தில் தீ விபத்து – 30 குழந்தைகள் பலி?

489
0
SHARE
Ad

KULANTHAIபொகோட்டா, மே 19 – கொலம்பியாவின் வடக்கு பகுதியில் இன்று ஒரு பேருந்து தீ பற்றி எரிந்தது. இந்த தீவிபத்தில் 30 குழந்தைகள் பலியாகினர். இந்த விபத்து குறித்து அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளதாவது,

ஒரு தேவாலய நிகழ்ச்சிக்கு சுமார் 50 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்ற இந்த பேருந்து எதிர்பராதவிதமாக திடீர் என தீ பற்றி எரிந்தது. முதலில் 26 குழந்தைகள் பலியானதாக தகவல்கள் வெளியானது. தற்போது 30 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த விபத்து குறித்து கொலம்பியா அதிபர் ஜூவான் மானுவல் சாண்டோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் மிகுந்த கவலை தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.