Home அவசியம் படிக்க வேண்டியவை தெலுக் இந்தான் இடைத்தேர்தல்: ஜசெக – தேமு நேரடிப் போட்டி!

தெலுக் இந்தான் இடைத்தேர்தல்: ஜசெக – தேமு நேரடிப் போட்டி!

487
0
SHARE
Ad

Teluk Intanதெலுக் இந்தான், மே 19 – தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணியும், பக்காத்தானும் நேரடியாக மோதுகின்றன.

இன்று நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலில் தேசிய முன்னணி வேட்பாளரான கெராக்கான் தலைவர் டத்தோ மா சியூ கியாங் மற்றும் ஜசெக வேட்பாளரான டையானா சோஃப்யா முகமட் டவுட் ஆகிய இருவரும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

#TamilSchoolmychoice

இதன் மூலம் தெலுக் இந்தான் தொகுதியில் தேசிய முன்னணிக்கும், ஜசெக- வுக்கும் நேரடி போட்டி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தெலுக் இந்தான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சீ லியோங் பெங் (வயது 48) புற்றுநோயால் கடந்த மே 1-ல் காலமானார்.

அதனைத் தொடர்ந்து, தெலுக் இந்தான் தொகுதியில் வரும் மே 31 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.