இந்நிலையில் ரஜினியுடன் மீண்டும் நயன்தாரா நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி தற்போது நடித்து வரும் ‘லிங்கா’ படத்தில்தான் நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.
ஏற்கெனவே, இந்த படத்தில் சேனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா என இரு கதாநாயகிகள் இருந்த போதிலும் இப்படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய பாடல் காட்சியில் ரஜினியுடன் சேர்ந்து நடனமாடவிருக்கிறாராம் நயன்தாரா.
எந்த படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடப் போவதில்லை என்ற கட்டுப்பாட்டுடன் வலம்வந்த நயன்தாரா, ரஜினி படம் என்பதால் அந்த கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளாராம்.