Home இந்தியா அழகிரியை மறந்து விட்டேன் – கருணாநிதி கோபம்

அழகிரியை மறந்து விட்டேன் – கருணாநிதி கோபம்

665
0
SHARE
Ad

INDIA-CHIEF MINISTERS-SINGHசென்னை, மே 19 – திமுக தலைவர் மு.கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அழகிரி என்ற ஒருவரை யார் என்றே தமக்கும் திமுகவுக்கு தெரியாது என்று ஆவேசமாக தெரிவித்தார்.

நேற்று கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின், தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்று தான் கட்சியிலுள்ள அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தாம் விலகிக் கொள்கிறேன் என்று கடிதம் எழுதி திமுக தலைவரும் தந்தையுமான கருணாநியிடம் கொடுத்துள்ளார்.

இக்கடிதத்தை ஏற்க மறுத்த கலைஞர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் ஸ்டாலினை சமாதானப்படுத்தினர். இந்நிலையில், மு.க.அழகிரி தேர்தல் முடிவு தேதியன்று தோல்விக்கு யார் காரணமோ அவர்கள் கட்சியைவிட்டு விலக வேண்டும் என்று அன்றைய தினம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

நேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்த செய்தியை அறிந்து மு.க.அழகிரி இதெல்லாம் நாடகம் என்று பேட்டி கொடுத்துள்ளார்.  இதற்கு பதிலடி கொடுத்த கருணாநிதி அழகிரி யார் என்றே தெரியாது என்று கூறியுள்ளார். இவ்விஷயம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஸ்டாலின் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக கூறுவது கடைந்தெடுத்த பொய்” என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தி.மு.க.வில் இருந்து விலக்கப்பட்ட அழகிரியை மறந்ததாகவும் அவரைப்பற்றி நான் இனி பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கட்சி தோல்வி குறித்து கலைஞர் தெரிவிக்கையில், விரைவில் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூடி இதைப்பற்றி ஆய்வு செய்யும்.