Home கலை உலகம் மீண்டும் சிம்புவுடன் ஹன்சிகா வாலு படத்தில் நடிக்கிறார்!

மீண்டும் சிம்புவுடன் ஹன்சிகா வாலு படத்தில் நடிக்கிறார்!

462
0
SHARE
Ad

hansika-with-simbuசென்னை, மே 19 – அண்மையில் கருத்து வேறுபாடு காரணமாக சிம்புவும் ஹன்சிகாவும் பிரிந்துள்ள நிலையில், தற்போது வாலு படத்திற்காக இருவரும் சமரசமாகியுள்ளார். இயைடுத்து ‘வாலு’ படத்தில் மீண்டும் ஹன்சிகா நடிக்கிறார்.

சிம்புவும், ஹன்சிகாவும் ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ படங்களில் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள்.

காதல் முறிந்து விட்டதாக சிம்பு அறிவித்தார். பிறகு நயன்தாரா ஜோடியாக இது நம்ம ஆளு படத்தில் நடிக்க துவங்கினார். இது ஹன்சிகாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வாலு படத்தில் சிம்புவுடன் தொடர்ந்து நடிக்க மறுத்தார். இதனால் படம் முடிவடையாமல் நின்றது.

#TamilSchoolmychoice

படக்குழுவினர் தவித்தார்கள்.படத்தில் நடிக்க மறுப்பதாக ஹன்சிகா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. தனது கால்சீட்களை விரயம் செய்து விட்டதாக ஹன்சிகா குற்றம் சாட்டினார். இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஹன்சிகா சமரசம் ஆனார்.

இதையடுத்து மீண்டும் ‘வாலு’ படத்தில் நடிக்கிறார். இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறுப்பாக படமாகி வருகின்றன. பாடல் காட்சிகளை முடித்து கொடுத்துள்ளார். ஒரிரு காட்சிகளே மிதம் உள்ளன என்றும் விரைவில் அதுவும் முடிந்து விடும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.