Home உலகம் ஆப்கானிஸ்தான் இன்னும் அபாயகரமான நாடுதான் – ஒபாமா!

ஆப்கானிஸ்தான் இன்னும் அபாயகரமான நாடுதான் – ஒபாமா!

513
0
SHARE
Ad

obamaவாஷிங்டன், மே 27 – ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு தகர்க்கப்பட்டாலும், இன்னும் அது அபாயகரமான நாடாகத்தான் உள்ளது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானப் படைத் தளத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ரகசியமாக, திடீர் பயணம் மேற்கொண்ட அவர், அமெரிக்க வீரர்களிடம் கூறியதாவது,

“ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்களை தீவிரவாதிகள் தாக்கி வருகிறார்கள். எனினும், இயல்புநிலை மெதுவாக திரும்பி வருகிறது. பெண்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கி இருக்கிறார்கள். மக்களின் சுகாதாரத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது.”

#TamilSchoolmychoice

“ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் தங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்க்கிறார்கள். பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு, ஆப்கானிஸ்தான் கடந்த 12 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. அவற்றுக்கு முக்கிய காரணமாக விளங்கிய அமெரிக்கப் படைகளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

“மேலும், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்குவதில், பக்ராமில் உள்ள அமெரிக்கப் படைகள் முக்கியப் பங்காற்றின. அவர்களை ஆப்கானிஸ்தானில் இருந்து இந்த ஆண்டு இறுதியில் வெளியேற்றுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.”

“ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தலிபான்களின் அச்சுறுத்தல்களையும் மீறி லட்சக்கணக்கானோர் வாக்களித்தனர். ஆப்கன் ராணுவத்தினர் ஆயிரக்கணக்கானோர் வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.”

“ஆப்கானிஸ்தான்  ராணுவத்தினர் தங்கள் நாட்டைப் பாதுகாக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பது நம்பிக்கைக்கான அறிகுறியாகும்” என்று கூறியுள்ளார்.