டெல்லி, மே 27 – புதிதாக அமைந்துள்ள மோடி அரசில் நேற்று பதவியேற்ற மத்திய அமைச்சர்களுக்கான இலாகா விவரங்கள் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு உள்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்க்கு வெளியுறவுத் துறையும், அருண் ஜேட்லிக்கு நிதி மற்றும் பாதுகாப்புத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர்களான ரவிசங்கர் பிரசாத்துக்கு சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு துறையும், சதானந்த கவுடாவிற்கு ரயில்வே துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதின் கட்கரிக்கு தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. வெங்கய்யா நாயுடுவிற்கு நகர்புற வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
நஜ்மா ஹெப்துல்லாவிற்கு சிறுபான்மையினர் நலத்துறை, அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையும், கோபிநாத் முன்டேவுக்கு ஊரக வளர்ச்சி துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ராம்விலாஸ் பாஸ்வான் உணவு மற்றும் நுகர்பொருள் -துறையும், மேனகா காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் துறையையும், ஹர்ஷவர்தன் சுகாதாரத்துறையயும் கவனிக்க உள்ளனர். இவர்கள் தவிர தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்களான நிர்மலா சீதாராமனுக்கு வணிகவரி மற்றும் தொழில்துறையும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கனரக தொழில்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.