Home இந்தியா இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் – மத்திய அரசுக்கு ஜெயலலிதா கோரிக்கை!

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் – மத்திய அரசுக்கு ஜெயலலிதா கோரிக்கை!

402
0
SHARE
Ad

modi1புதுடில்லி, ஜூன் 5 – கடந்த செவ்வாய்க்கிழமை புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்தார். அப்போது அவர் பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளார்.

இலங்கையில் தமிழீழம் அமைவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரும் தீர்மானத்தை ஐ.நாவில் இந்தியா கொண்டு வர வேண்டும், இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பிரதமரிடம் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
 
இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர் பிரச்சினைகள், ஈழத்தமிழர் பிரச்சினைகள் மற்றும் தமிழக நிலவரங்களை பிரதமரிடம் சுமார் 50 நிமிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாக் ஜலசந்தியில் உள்ள 285 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட சிறிய பகுதி கச்சத்தீவு. அதன் ஆரம்ப உரிமையாளர் ராமநாதபுரம் ராஜா என்பதை நிரூபிக்க போதுமான வரலாற்று ஆவணங்கள் உள்ளன.

 ஆனால், 1974, 1976 ஆகிய ஆண்டுகளில் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டது. அதை எதிர்த்தும் கச்சத்தீவை மீட்கக் கோரியும் 1991 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 உச்ச நீதிமன்றத்தில் 2008 ஆம் ஆண்டிலும் 2011 ஆம் ஆண்டிலும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக, கச்சத்தீவு அருகே செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துகிறது.

 எனவே, கச்சத்தீவை மீட்கவும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.