புதுடில்லி, ஜூன் 9 – ஜெய்ப்பூரில் மலேசியப் பெண்ணிற்கு போதை வஸ்துகளைக் கொடுத்து பாலியல் வால்லுறவு செய்த நபருக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை அறிவித்துள்ளது.
மலேசியாவிற்கு திரும்பி வருவதற்கு முன்பாக, அந்த பெண் நீதிபதி முன்பாக தனது சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளதால், குற்றவியல் சட்டம் 164 பிரிவின் படி, அந்த பெண் இந்த வழக்கில் நேரில் ஆஜராகவில்லை என்றாலும் குற்றவாளியின் மீது வழக்கு விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும், அப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததற்கான ஆதாரங்களாக, அந்த காரில் இருந்து சம்பந்தப்பட்ட நபரின் விந்தணு கறைகள் மற்றும் போதை வஸ்து கலந்த குளிர்பான பாட்டில் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது சந்தேகப்படும் அந்த நபரை காவல்துறையினர் கைது செய்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்தியாவிலுள்ள ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் மலேசிய பெண் ஒருவர் வர்த்தகம் தொடர்பாக சென்றுள்ளார்.
ஜெய்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவர் வியாழன் அன்று இரவு வர்த்தக ரீதியாக ஒருவரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவரும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் உணவருந்தியுள்ளனர்.
பின்னர் இருவரும் காரில் சென்றுள்ளனர். அப்போது மறைவான பகுதிக்கு காரை கொண்டு சென்ற அந்த ஜெய்ப்பூர் நபர் மலேசிய பெண்ணுக்கு குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்து காருக்குள் வைத்து பலவந்தமாக பாலியல் வல்லுறவு கொண்டுள்ளார்.
பின்னர் அந்த பெண்ணை அவர் தங்கியிருந்த விடுதி முன்பு இறங்கிவிட்டு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
(படம்: குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர்)