Home உலகம் இலங்கையில் கலாச்சார மையம் அமைக்கும் இந்தியா!  

இலங்கையில் கலாச்சார மையம் அமைக்கும் இந்தியா!  

557
0
SHARE
Ad

srilankaகொழும்பு, ஜூன் 10 – இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் இந்த்திய மதிப்பில் சுமார் 56 கோடி ரூபாயில் கலாச்சார மையம் ஒன்றை இந்தியா அமைத்துக் கொடுக்க உள்ளது.

உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில், போர் முடிந்த பிறகும் மறுசீரமைப்பு பணிகள் மிகவும் மந்தமாகவே நடந்து வருகின்றது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் கூட இன்னும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில், மக்களின் கலை மற்றும் கலாச்சார பண்பாட்டை வளர்க்கும் விதத்தில் கலாச்சார மையம் ஒன்றை அமைப்பதற்கு இந்தியா முன் வந்துள்ளது.

#TamilSchoolmychoice

அதன்படியில் வடக்கு மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில், பொது நூலகத்துக்கு அருகே இந்த கலாச்சார மையம் கட்டப்பட இருக்கிறது. இந்த மையத்தில் பல்வேறு பயிற்சிகள், கல்வி தொடர்பான தகவல்கள் மற்றும் பல்வேறு விதமான பண்பாட்டு ஒழுக்கங்கள் கற்றுத்தரப்படும்.

மேலும், இங்கு ஒரே நேரத்தில் 600 பேர் அமரக்கூடிய அளவிலான கலையரங்கம், ஆய்வு மாணவர்களுக்கு தேவையான வசதிகள் அடங்கிய பல்துறை நூலகம், கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கியிருக்கும்.

இந்த பணிகள் அனைத்தும் 3 ஆண்டுக்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்கா மற்றும் அந்நாட்டு பொருளாதார மேம்பாட்டு செயலாளர் நிகல் ஜெயதிலகா ஆகியோர் கையெழுத்திட்டனர்.