புது டில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அதிபர் கோத்தாபய ராஜபக்சே வருகிற நவம்பர் 29-ஆம் தேதி இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
நாட்டின் புதிய அதிபராக கடந்த திங்களன்று பதவியேற்ற பின்னர், ராஜபக்சே பதவியிலிருந்த முதல் நாளில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ராஜபக்சே பதவியேற்ற பின்னர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ வருகையாக இது கருதப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சே சுமார் 54 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றார். அவரது நெருங்கிய போட்டியாளரான சுஜித் பிரேமதாசா 45.5 விழுக்காடு வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த திங்களன்று ராஜபக்சே பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.