Home இந்தியா கச்சத் தீவு பிரச்சனையால் காங்கிரஸ்-திமுக ஆதரவு வாக்குகள் பாதிக்கப்படுமா?

கச்சத் தீவு பிரச்சனையால் காங்கிரஸ்-திமுக ஆதரவு வாக்குகள் பாதிக்கப்படுமா?

355
0
SHARE
Ad
கு.அண்ணாமலை

புதுடில்லி : 1974-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சொந்தமான தமிழ் நாட்டின் தீவான கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவர் கு.அண்ணாமலை தகவல் கோரும் உரிமை சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு சமர்ப்பித்த விண்ணப்பித்ததைத் தொடர்ந்து கச்சத்தீவு எவ்வாறு காங்கிரஸ்-திமுக அரசாங்கங்களால் இலங்கைக்கு வழங்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனை தமிழ் நாட்டு பாஜக தலைவர்கள் தங்களின் பிரச்சாரங்களில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து மீனவர் கிராமங்களிலும் தென் மாவட்டங்களிலும் திமுக-காங்கிரசுக்கு எதிராக வாக்குகள் திரும்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.