Home நாடு தெங்கு சாப்ருல் சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியிலிருந்து விலகினார்!

தெங்கு சாப்ருல் சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியிலிருந்து விலகினார்!

357
0
SHARE
Ad
தெங்கு சாப்ருல்

ஷா ஆலாம் : தற்போது முதலீடு, வாணிப, தொழில் துறை அமைச்சராகப் பதவி வகித்துவரும் தெங்கு சாப்ருல் சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். எனினும் கோத்தா ராஜா அம்னோ தொகுதி தலைவராகவும், நியமிக்கப்பட்ட அம்னோ உச்சமன்ற உறுப்பினராகவும் அவர் தன் கட்சிப் பதவிகளில் தொடர்வார்.

தன் முகநூல் பக்கத்தில் தனது முடிவை அறிவித்த தெங்கு சாப்ருல், அம்னோவின் தேசியத் தலைவர் சாஹிட் ஹாமிடியின் மத்திய தலைமைத்துவம் எடுக்கும் முடிவுகளை மாநில அளவில் செயல்படுத்துவதில் தெளிவற்ற நிலையும், இலக்குகளில் இருந்து வேறுபடும் நிலைமையும் இருப்பதால் இந்த முடிவைத் தான் எடுப்பதாக தெங்கு சாப்ருல் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனால் தனக்குப் பதிலாக வேறொருவரை நியமிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் தான் வழிவிட்டு விலகுவதாக தெங்கு சாப்ருல் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2022 பொதுத் தேர்தலில் அவர் கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அப்போது அவர் நிதியமைச்சராக இருந்தார்.

நிதியமைச்சராக இருந்தபோது, தான் போட்டியிடும் கோலசிலாங்கூர் தொகுதியை தத்தெடுப்பதாகவும் மேம்பாட்டுத் திட்டங்களை அங்கு கொண்டுவரப் போவதாகவும் அவர் விடுத்த அறிவிப்பு சர்ச்சைக்குள்ளானது.

2023 சட்டமன்றத் தேர்தல்களில் சிலாங்கூரில் 12 இடங்களில் போட்டியிட்ட அம்னோ 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அம்னோ தோல்வியடைந்த தோல்விகளை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி பெர்சாத்து, பாஸ் கட்சிகளின் வாயிலாகக் கைப்பற்றியது.