நடிகை பிரியங்கா ‘கங்காரு’ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘லாரா’ ‘கோடை மழை’ உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் களஞ்சியம் போலீஸாக நடித்துவரும் ‘கோடை மழை’ படம் அண்ணன்–தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட படமாகும்.
இப்படத்தில் களஞ்சியத்தின் தங்கையாக நடிகை பிரியங்கா நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட பட காட்சி சங்கரன்கோவிலில் உள்ள ஒரு வீட்டில் படமாக்கப்பட்டது.
படத்தின் கதைப்படி பிரியங்கா ஒரு இளைஞரை காதலிக்கிறார். அந்தக் காதல் களஞ்சியத்துக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது களஞ்சியம் கோபத்துடன் பிரியங்காவின் கன்னத்தில் அறைவது போலவும் ஒரு காட்சி எடுக்கப்பட இருந்தது.
அதைத் தொடர்ந்து அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனை கண்ட களஞ்சியமும், படப்பிடிப்பு குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிரியங்காவை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபின் மயக்கம் தெளிந்து கண் விழித்தார். ஆனால், காதுக்குள் “கொய்ங்’ என்று சத்தம் வருவதாக தெரிவித்ததையடுத்து உடனே காது சிகிச்சை மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் நடிகை பிரியங்கா.