Home நாடு பந்திங் அருகே படகு விபத்து! 66 பேரைக் காணவில்லை!

பந்திங் அருகே படகு விபத்து! 66 பேரைக் காணவில்லை!

660
0
SHARE
Ad

861f35de789769caaa6ee1456d93cc88கோலாலம்பூர், ஜூன் 18 – பந்திங் அருகே, சுங்கை ஆயர் ஈத்தாம் என்ற இடத்தில் இருந்து 2 மைல் கடல் தொலைவிற்கு அப்பால் படகு ஒன்று மூழ்கியதில் 66 பேரைக் காணவில்லை.

அந்த படகில் வெளிநாட்டைச் சேர்ந்த 97 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகின்றது. இந்த விபத்து குறித்து இன்று அதிகாலை 12.24 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போதைய நிலவரப்படி, 31 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மலேசிய கடற்படையும், தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்த படகில் சட்டவிரோதமாக வந்தவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகின்றது.