Home நாடு பந்திங் படகு விபத்து: 61 பேர் மீட்கப்பட்டனர்! ஒருவர் பலி!

பந்திங் படகு விபத்து: 61 பேர் மீட்கப்பட்டனர்! ஒருவர் பலி!

605
0
SHARE
Ad

Bantingபந்திங், ஜூன் 18 – சுங்கை ஆயர் ஈத்தாமில் இன்று காலை நடந்த படகு விபத்தில் இருந்து இதுவரை 61 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 12 பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.

இந்நிலையில், இவ்விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவரது உடலை மீனவர் ஒருவர், இன்று காலை 10.55 மணியளவில் சுங்கை லங்காட் அருகே கண்டு மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

விபத்தில் மூழ்கிய படகையும் மீட்புப் படையினர் கைப்பற்றினர்.

#TamilSchoolmychoice

அந்நிய நாட்டவர்கள் என்று நம்பப்படும் 97 பேர் அந்த படகில் பயணம் செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.