Home நாடு பந்திங் படகு விபத்து: மேலும் 24 பேர் மீட்பு!

பந்திங் படகு விபத்து: மேலும் 24 பேர் மீட்பு!

482
0
SHARE
Ad

Banting

கோலாலம்பூர், ஜூன் 18 – பந்திங் அருகே, சுங்கை ஆயர் ஈத்தாம் என்ற இடத்தில் இருந்து 2 மைல் கடல் தொலைவிற்கு அப்பால் இன்று காலை நடந்த படகு விபத்தில் 66 பேரைக் காணவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், அந்த 66 பேரில் 24 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தற்போது தகவல் கிடைத்துள்ளது. மீதமுள்ள 42 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

#TamilSchoolmychoice

இதுவரை யாரும் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

97 பயணிகள் இருந்த அந்த படகில், இன்று காலை 31 பேர் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.