Home கலை உலகம் சிவகார்த்திகேயனால் கோபமான தனுஷ்!

சிவகார்த்திகேயனால் கோபமான தனுஷ்!

592
0
SHARE
Ad

Actor Dhanush Latest Photosசென்னை, ஜூன் 18 – சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் ஒரு நடிகர். இவர் படத்தில் நடிப்பது மட்டுமின்றி அப்படத்தை எப்படி விளம்பரம் செய்வது என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டுள்ளார்.

ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் தன்னையும், தன் படத்தையும் எப்படி (மார்க்கெட்டிங்) சந்தைப்படுத்துதல் வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பிடம் முன்கூட்டியே தெளிவாக சொல்லிவிடுவாறாம்.

அதாவது தன் படம் வெளிவரும் முதல் நாள் ஆங்கில நாளிதழ் அதுவும் முன்னணி நாளிதழில் முழு பக்கம் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்பது சிவாவின் கண்டிப்பு. அதன்படியே இவர் இதுவரை நடித்த படங்கள் விளம்பரம் செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

இப்போது சிவா நடித்து வரும் ‘டாணா’ படத்திற்கும் இப்படியெல்லாம் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கூறுவதற்கு பதிலாக இயக்குனரிடம் கூறியுள்ளார்.

இயக்குனர் துரைசெந்தில் இப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் வசம் சொல்லிவிட்டார். இதைக் கேள்விப்பட்ட தனுஷோ கோபப்பட்டு “நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் , விளம்பரம், வியாபாரம் எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சிவாவுக்கு பதில் அனுப்பியுள்ளார் தனுஷ்.