Home வாழ் நலம் டெங்கு காய்ச்சலை நீக்க நிலவேம்பு கசாயம்!

டெங்கு காய்ச்சலை நீக்க நிலவேம்பு கசாயம்!

887
0
SHARE
Ad

nilavampuஜூன் 18 – பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வாட்டி எடுக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு பல மருத்துவமுறைகளை கையாண்டு வருகின்றனர். இதில் சித்த மருத்துவர்கள் பரிந்துரைப்பது நிலவேம்பு கசாயம்.

இதற்கு பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளன. சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நிலவேம்பு மூலிகையின் பங்கு அதிகம் உள்ளது. ஒரு சிறந்த கிருமி நாசினி இதனால் உடலில் நோய் எதிப்பு சக்தி அதிகம் உருவாகின்றது.

இந்தியாவில் இந்த மூலிகை அதிகம் காணப்படும் ஒரு செடி வகையாகும். இது சூரத்து நிலவேம்பு, சீமை நிலவேம்பு என்று இருவகை உண்டு. இதனை சிரட்குச்சி, கிராதம், கிரியாத்து, கிராகதி, நாட்டுநிலவேம்பு, காண்டம், கோகணம் என்று பல பெயர்களால் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதன் இலை, தண்டு, காய், வேர், பூ அனைத்தும் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் கொண்டது. இதன் மருத்துவ குண நலன்களை பற்றி பார்ப்போம்.

hlகுடல் பூச்சி நீங்க:
வயிற்று பூச்சிகள் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடலின் வலிமை குறைந்து நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றோம். வயிற்று பூச்சிகள் நீங்க நிலவேம்பு நீரை நீரில் கொதிக்கவைத்து காசாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேரத்தில் அருந்தி வந்தால் வயிற்று பூச்சி நீங்கும்.

உடல் வலு பெற:
உடல் வலிமையின்றி மெலிந்துகாணப்படுபவர்கள் நிலவேம்பின் பூ மற்றும் காய்களை கசாயமாக செய்து சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு வலிமை அடையும்.

மயக்கம் தீர:
சிலருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தொடர்ந்து நிலவேம்பு கஷாயத்தை அருந்தி வந்தால் சரியாகிவிடும்.

niilaaபசியை தூண்ட:
பசியால் அவதிப்படுபவர்களை காட்டிலும் பசியின்றி அவதிப்படுபவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுகள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றது.

இவர்கள் நிலவேம்பு பூ, மற்றும் காய் பகுதியை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்துவந்தால் பசி நன்றாக ஏற்படும். அதே போன்று பித்தம் சார்ந்த வாந்தி, மயக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கு இந்த பாதிப்பில் இருந்து விடுபட இந்த கஷாயம் உதவுகிறது.

தலை வலி நீங்க:
அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை இரண்டு வேளையும் பருகி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறைந்து தும்மல் இருமல் போன்ற பாதிப்புகள் சரியாகும்.

nilaaவிஷ காய்ச்சல் குணமாக:

நிலவேம்பு 15 கிராம், கிக்சிலத் தோல் 5 கிராம், கொத்துமல்லி 5 கிராம், இவற்றை ஒன்றாக சேர்த்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து. அப்படியே மூடி ஒரு மணி நேரம் கழித்து வடிகட்டி பின்பு நாள் ஒன்றுக்கு 30 மிலி என மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும்.

அஜீரணம் சரியாக:
நிலவேம்பு (பூ, காய்) காய்ந்தது 16 கிராம், வசம்புத்தூள் 4 கிராம், சதக்குப்பை விதைத்தூள் 4 கிராம், கோரைக்கிழங்கு தூள் 17 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு அதை 1 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி எடுத்து தினமும் அருந்தி வந்தால் உடல் வலு பெறும், மேலும் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.