Home தொழில் நுட்பம் பேஸ்புக்கின் ‘ஸ்லிங்ஷாட்’ செயலி அதிகாரப்பூர்வ வெளியீடு!

பேஸ்புக்கின் ‘ஸ்லிங்ஷாட்’ செயலி அதிகாரப்பூர்வ வெளியீடு!

508
0
SHARE
Ad

Slingshotநியூயார்க், ஜூன் 18 – நட்பு ஊடகமான பேஸ்புக், தனது ‘ஸ்லிங்ஷாட்’ (Slingshot) செயலியை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

கடந்த வாரம் திங்கள் கிழமை, ஆப்பிள் ஸ்டோரில் தவறுதலாக வெளியான இந்த செயலி, பின்னர் சில மணி நேரங்களில் திரும்ப பெறப்பட்டது.

அன்று முதல் பயனர்களிடையே அந்த செயலி பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

புகைப்படங்களை குறுந்தகவல் போன்று அனுப்பும் ‘போட்டோ மெசேஜ்ஜிங்’ (Photo Messaging) செயலியான ‘ஸ்னாப்சாட்’ (Snapchat)-க்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘ஸ்லிங்ஷாட்’ செயலி பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்த செயலியின் மூலம் பேஸ்புக் நிறுவனம் தனது அடிப்படை செயல்முறையினையே மாற்றி அமைத்துள்ளது. பேஸ்புக்கில் கணக்குகள் இல்லாத பயனர்களும், பேஸ்புக்கில் உள்ள தங்கள் நண்பர்களுக்கு ஸ்லிங்ஷாட் செயலியின் மூலம் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

மேலும், இதில் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் குறுந்தகவல்களை பெறும் நண்பர்கள் அதனை பார்க்க வேண்டும் எனில் குறுந்தகவல் அனுப்பியவருக்கு புதிய புகைப்படங்களையோ அல்லது காணொளிக் காட்சிகளையோ அனுப்ப வேண்டும். மேலும், மற்ற திறன்பேசிகளுக்கு அனுப்பப்படும் ஸ்லிங்ஷாட் குறுந்தகவல்கள் தன்னிச்சையாக அழியும் தன்மை கொண்டவை.

இந்த புதிய செயலியானது தற்போது அமெரிக்காவில் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. விரைவில் உலகம் எங்கும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.