Home உலகம் ஈரானுடன் மீண்டும் தூதரக உறவு: இங்கிலாந்து முடிவு!

ஈரானுடன் மீண்டும் தூதரக உறவு: இங்கிலாந்து முடிவு!

547
0
SHARE
Ad

englandதெஹ்ரான், ஜூன் 18 – ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இங்கிலாந்து, தங்கள் நாட்டு தூதரகத்தை மீண்டும் துவங்க இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் அறிவித்துள்ளார்.

இது குறித்து ஹேக் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- “தெஹ்ரானில் பிரிட்டிஷ் தூதரகத்தை துவக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

iraan

#TamilSchoolmychoice

இதற்கான பணிகள் முடிந்தவுடன் தூதரகம் மீண்டும் துவங்கப்படும். தற்போது அங்கு இதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.

ஈராக்கில் தீவிரவாதத்தினை ஒழிப்பது குறித்து மேற்கத்திய நாடுகள் தீவிரமாக பரிசீலித்து வரும் நிலையில், அண்டை நாடான ஈரானில் தூதரகம் திறக்க இருப்பது, ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கான உறவுகள் பலப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 2011-ம் ஆண்டு இங்கிலாந்து, ஈரானுடனான அரசியல் ரீதியான தொடர்பினை முறித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.