Home உலகம் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை – ஆப்கனுக்கு பாகிஸ்தான் கோரிக்கை!

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை – ஆப்கனுக்கு பாகிஸ்தான் கோரிக்கை!

458
0
SHARE
Ad

pakஇஸ்லாமாபாத், ஜூன் 18 – பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து தீவிரவாதிகள் எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச் செல்கின்றனர். இதனை தடுக்க ஆப்கன் எல்லையை மூடுமாறு அந்நாட்டு அதிபர் கர்சாயிடம் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவம் விமான தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால் சுமார் 2000 தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக நேற்றுமுன்தினம் தகவல் வெளியானது.

எனவே, தீவிரவாதிகளை தடுத்து நிறுத்தும் வகையில் எல்லையை மூடும்படி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாயிடம் கேட்டுக்கொண்டார்.

#TamilSchoolmychoice

இதனை உறுதி செய்த பிரதமர் அலுவலகம், ஆப்கன் அதிபர் கர்சாயை நவாஸ் ஷெரீப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகின்றது.

இராணுவத்திற்கு எதிரான விமான தாக்குதலில் இதுவரை 200 தீவிரவாதிகள் கொள்ளப்பட்டு இருப்பது குரிப்பிடத்தக்கது. ரமலான் மாதம் தொடங்குவதற்கு முன்பாக தாக்குதல் நடவடிக்கையை நிறைவு செய்ய பாகிஸ்தான் இராணுவம் விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.