Home இந்தியா திமுகவில் இருந்து திடீர் விலகல் ஏன்? குஷ்பு விளக்கம்!

திமுகவில் இருந்து திடீர் விலகல் ஏன்? குஷ்பு விளக்கம்!

618
0
SHARE
Ad

kushbuசென்னை, ஜூன் 18 – “தி.மு.க. வில் என் அர்பணிப்பும், உழைப்பும் ஒருவழிப் பாதையாக இருப்பதால் கனத்த இதயத்துடன், விலகும் முடிவை மேற்கொள்கிறேன்” என  நடிகை குஷ்பு தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னை, இல்லத்தின் ஒருத்தியாக ஏற்றுக் கொண்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தி.மு.க.,வில் இணைந்து பொதுவாழ்வில் ஈடுபட்டேன்.

தி.மு.க.,வில் இணைந்த நாள் முதல் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நூறு சதவீத சிரத்தையுடன் நிறைவேற்றியதை தி.மு.க.,வில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல், அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரும் அறிவர்.

#TamilSchoolmychoice

ஆனால், என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒரு வழிப் பாதையாக தி.மு.க.,வில் நீடிக்கிறது. இந்நிலையில், நான் தேர்ந்தெடுத்த பாதையும் பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, தி.மு.க,விலிருந்தும், அதன் அடிப்படை உறுப்பினரிலிருந்தும், விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்” என குஷ்பு கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து டுவிட்டர் இணையத்தின் மூலம் கருத்து தெரிவித்துள்ள குஷ்பூ,

”நெருக்கடியான நேரத்தில் கடினமான முடிவை மகிழ்வோடு எடுக்க வேண்டும் என்பர். அதுபோன்ற முடிவைத்தான் இப்போது நான் எடுத்துள்ளேன். இதில் யாரையும் புண்படுத்த நோக்கம் இல்லை. எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

இந்த இக்கட்டான கட்டத்தில் என்னை சிறிது காலம், தொடர்பு கொள்ள வேண்டாம் என பத்திரிகையாளர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.