Home One Line P2 குஷ்பு சென்ற காரை லாரி மோதியது- தீய நோக்கமா என்பது குறித்து காவல் துறை விசாரணை

குஷ்பு சென்ற காரை லாரி மோதியது- தீய நோக்கமா என்பது குறித்து காவல் துறை விசாரணை

800
0
SHARE
Ad

சென்னை: பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த குஷ்பு சுந்தர் புதன்கிழமை கார் விபத்தில் சிக்கினார். ஆனால், அந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

குஷ்பு சுந்தர் தனது காரில் பயணம் செய்த போது மேல் மருவத்தூர் அருகே லாரி ஒன்று அவரது காரை மோதியது.

இந்த விபத்தில் குஷ்பு காயமின்றி தப்பினார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட குஷ்பு, “மேல் மருவத்தூர் அருகே விபத்தில் சிக்கினேன். ஒரு லாரி எங்களை மோதியது. உங்கள் ஆசீர்வாதங்களுடனும், கடவுளின் கிருபையுடனும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். வேல் யாத்திரையில் பங்கேற்க கூடலூர் நோக்கி எனது பயணத்தைத் தொடருவேன். கடவுள் முருகன் எங்களை காப்பாற்றியுள்ளார். என் கணவர் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது.

“ஒரு கொள்கலன் லாரி என்னை மோதியது. பத்திரிகைகள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். எனது கார் வலது பாதையில் நகர்ந்து கொண்டிருந்தது. இந்த கொள்கலன் எங்கிருந்து வந்து மோதியது? ஏதாவது உள்நோக்கத்துடன் கூடிய மோசடி இந்த விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளதா என்பதை காவல் துறையினர் விசாரிக்கின்றனர். ” என்று அவர் பதிவிட்டுள்ளார்.