Home One Line P1 கிரிக் நாடாளுமன்றம் காலியானது தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டது

கிரிக் நாடாளுமன்றம் காலியானது தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டது

573
0
SHARE
Ad

கிரிக்: கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஸ்புல்லா ஓஸ்மானின் மரணம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்துள்ளதாக மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண் இன்று தெரிவித்தார்.

“கூட்டரசு அரசியலமைப்பின் 54- வது பிரிவு (1)- க்கு இணங்க, தேர்தல் ஆணையம் பி54 கிரிக், பேராக், தொகுதியை 60 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும்.

ஹாஸ்புல்லாவின் குடும்பத்தினருக்கு அசார் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அம்னோ கிரிக் தொகுதியின் தலைவரான ஹாஸ்புல்லா திங்களன்று தனது மனைவியின் சொந்த ஊரான பகாங்கில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63.

2018 பொதுத் தேர்தலின் போது அவர் 5,000- க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் பாஸ் வேட்பாளரை தோற்கடித்தார்.